Garden Tips and trickstamil garden article

கடைக்கு போய் காய்கள் வாங்க தேவையில்லை இப்படி செய்யுங்கள்

Grow veggies in home tamil

ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே மாடித்தோட்டம் முறையில் எப்படி திட்டமிட்டு எடுப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் ஒரு ஒரு குடும்பமும் ஒரு ஒரு விதம், உங்கள் குடும்பத்தினர் எந்த காய்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

நான்கு முதல் ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு எத்தனை செடி வளர்த்தால் வீட்டுக்கு தேவையான காய்கள் கிடைக்கும் என்கின்ற சீக்ரெட் பார்முலாவை ( secret Formula ) சொல்லப்போகிறேன்.

okra, hyacinth beans, cluster beans

முதலில், வெண்டை அவரை கொத்தவரங்காய், இந்த மூன்று காயும் பொரியல் காய்கறிகள். இது பத்து செடி போட்டுக் கொள்ளுங்கள். 15 க்கு 15 Grow bag இல் இரண்டு செடி போடலாம், மொத்தம் 15 grow bag இல் 30 ( வெண்டை -10, அவரை -10 கொத்தவரங்காய் -10 ) செடிகளும் அடங்கிவிடும்.

Brinjal-Seeds

தக்காளி மிக எளிமையாக வளந்துவிடும்.  ஒரு வீட்டுக்கு 2 இல் இருந்து மூன்று செடிகள் இருந்தால் போதும். “நான் தக்காளி ஊறுகாய் அல்லது தொக்கு செய்யப் போகிறேன்” என்றால், ஒரு பத்து செடி போடலாம். இது 15 க்கு 15 தொட்டியில் / Grow bag இல் ஒரு செடி நடலாம் நன்றாக வளரும்.

மிளகாய் இரண்டு செடி இருந்தால் போதுமானது. கருவப்பிலை ஒரு செடி இருந்தால் கூட போதும்.

Karamani

காராமணி, ஆறு செடிகள் இருந்தால் போதும். நிறைய காய் கொடுக்கும் 10 கூட போட்டுக் கொள்ளலாம். உங்கள் விருப்பம் 15 க்கு 15 தொட்டியில் ஒன்று முதல் இரண்டு செடிகள் வளர்த்து வரலாம்.

அடுத்தது கொடி வகை காய்கறிகள்:
கொடிவகை காய்கறிகளில் முக்கியமான 3 காய்கள் பாகற்காய், புடலங்காய், சுரக்காய். இந்த மூன்று காய்களும் வீட்டுக்குத் தேவையான பொரியல்கள் வைக்க மிக உதவியாக இருக்கும். இந்த ஒரு ஒரு காய்களிலும் மூன்று கொடி ஏற்றி விடுவது நல்லது. இதற்கு 15க்கு 18 அல்லது 18க்கு 18 ( Grow bag ) தொட்டிக்கலை பயன்படுத்தலாம்.  கொடி அவரை, பட்டாணி மற்றும் கோவக்காயை 15க்கு 18 அல்லது 18க்கு 18 தொட்டிகளில் வளர்க்கலாம்.

பூசணி பரங்கி போன்ற காய்களை மாடித்தோட்டத்தில் வளர்ப்பதற்கு 24 x 24 தொட்டி சிறந்தது இதில் 1முதல் 2 கொடிகள் நடலாம்.

Mint growing

புதினா மற்றும் கொத்தமல்லி இரண்டு தொட்டிகளில் வைத்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் விற்கும் விலைக்கு வீட்டிலேயே சுலபமாக போட்டு எடுக்கலாம் இதற்கு சதுர அளவில் உள்ள தொட்டிகளை அல்லது Grow Bag சரியாக இருக்கும்.

marigold

இவ்வாறு உங்கள் மாடித் தோட்டத்தை அழகாக திட்டமிட்டு கொள்ளலாம் இத்துடன் அழகிய பூச்செடிகளை உங்கள் தோட்டத்தில் வளர்த்துவருங்கள். பூச்செடிகள் தான் உங்கள் தோட்டத்தின் உயிர்நாடி. பூக்கள் அதிகமாக இருந்தால் தேனி வரும், தேனீக்கள் வந்தால் தான் மகரந்த சேர்க்கை நடக்கும், மகரந்த சேர்க்கை நடந்தால் தான், பூக்கள் காயாக, கனியாக மாறும். அழகிய ரோஜாக்கள் சாமந்தி மல்லி மற்றும் பல வகை பூக்களை உங்கள் தோட்டத்தில் வளருங்கள். இவை அனைத்தையும் வீடியோ வடிவில் பார்க்க நமது youtube page பார்க்கவும். மேலும் இது போல பயனுள்ள தகவல்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இன்றைய subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சலில் இருந்து எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு subscription to Tamil Garden tips என்று subject mention செய்து ஒரு மெயில் தட்டி விடுங்க அது போதும். Our Email Id : Sakthivelorganicgardencentre@gmail.com 

Share and Enjoy !

0Shares
0 0 0