உங்கள் மண் அமிலத்தன்மை நிறைந்ததா அல்லது காரத்தன்மை நிறைந்ததா என்று கண்டுபிடிக்க சில வழிகள்.
முதலில் ஏன் இதை கண்டுபிடிக்க வேண்டும் இதன் மகத்துவம் என்ன என்று பார்க்கலாம் மண்களில் இந்த அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை சரியான அளவில் இல்லாவிட்டால் தேவையான ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு சென்று சேராது.
வேர்கள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் உதவிகொண்டு இந்த ஊட்டச்சத்துகளை உண்கிறது இந்த அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையும் சரியாக இல்லாவிட்டால் செடிகள் சத்துக்களை உண்ணுவது கடினமாகிவிடும்.
இந்த பரிசோதனை செய்து பார்க்க உங்களுக்கு தேவையான பொருள்கள்:
செய்முறை:
நீங்கள் எந்த தொட்டியில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த தொட்டியில் இருந்து 2 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டும் தனித்தனி கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவு கப்பில் வினிகர் ஊற்றிக் கொள்ளுங்கள். மற்றொரு கப்பில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இரண்டு டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடா எடுத்து ஒரு கப்பில் வைத்துக்கொள்ளுங்கள். மொத்தம் 5 கப்.
முதல் கப் மண்ணில் வினிகரை ஊற்றி கிளறிவிடுங்கள். சிறிது நேரத்தில் அந்த மண் கொப்பளித்தது போல வந்தாள் உங்கள் மண் காரத்தன்மை உடன் இருக்கிறது என்று அர்த்தம்.